புதியவை

மலையக ரயில் சேவையை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை

மலையக ரயில் சேவையை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை
தடைப்பட்டிருந்த மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
பண்டாரவளை மற்றும் ஹீல்ஓய ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக 2, இரவு நேர தபால் ரயில் சேவைகள் நேற்று (16) இடைநிறுத்தப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.
ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த சிறுசிறு மண்சரிவுகள் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் ஏனைய மண்சரிவுகளையும் சீர்செய்து இன்றைய தினத்திற்குள் ரயில்சேவையை வழமைக்குக் கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார்.
ஆயினும் பண்டாரவளையில் இருந்து கொழும்புக்கான ரயில்சேவைகள் இடமபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, வடக்கு மார்க்கத்திலான கல்கமுவ மற்றும் அம்பன்பொல இடையிலான பகுதியின் 155 ஆவது மைல்கல் அருகில் மூன்று யானைகள் ரயிலில் மோதியுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தலைமன்னார் நோக்கி நேற்றிரவு பயணித்த ரயிலுடன் இந்த யானைகள் மோதியுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.
இதனையடுத்து சற்று தாமதத்தின் பின்னர் ரயில்சேவை வழமைக்குத் திரும்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.