புதியவை

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் விஷேட பொதுச் சபை அமர்வு.

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் விஷேட பொதுச் சபை அமர்வு அண்மையில் (2015.10.03) காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் பேரவையின் பிரதம செயற்பாட்டாளர் வரலாற்று ஆய்வாளர் தேசமாண்ய ஜலீல் ஜீ யின் ஏற்பாட்டிலும் , கலாபூஷணம் யூ.எல். அலியார் அவர்களின் தலைமையிலும் இடம்பெற்றது.

கடந்த காலங்களின் பேரவையின் செயற்பாடுகள் பற்றி சிரேஷ்ட கலைஞர்களினால் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதனை அடுத்து புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது. அதன் விபரங்கள் வருமாறு:

தலைவராக:-
·         ஸ்தாபிதரும் , வரலாற்று ஆய்வாளருமான தேசமாண்ய ஜலீல் ஜீ (சம்மாந்துறை) அவர்களினை சபையோர் ஏகமனதாக தெரிவு செய்தனர்.
பொதுச் செயலாளராக :-
·         விபுலமாமணி வீ.ரீ.சகாதேவராஜா உதவிக் கல்விப் பணிப்பாளர்(காரைதீவு) அவர்களும்,
பொருளாளராக:-
·         கலாபூஷணம் முகில்வண்ணன்(பாண்டிருப்பு)
 துணைத் தலைவராக :-
·         எழுத்தாளர் பரதன் கந்தசாமி(கல்முனை)
துணைப் பொதுச் செயலாளராக :-
·         கலாரெத்தினா ஜுல்பிகா ஷெரீப்(கல்முனைக்குடி)
கணக்காய்வாளராக:-
·         எழுத்தாளர் எஸ்.எல்.மன்சூர் ISA(அட்டாளைச்சேனை) ஆகியோருடன்,
நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக : -
·         கலாபூஷணம் யூ.எல்.அலியார்(-துறை)
·         கலாபூஷணம் அக்கரைப்பாக்கியன்(பெரிய நீலாவணை)
·         எழுத்தாளர் எஸ்.எம்.இப்றாலெவ்வை(-துறை)
·         எழுத்தாளர் அதிபர் ரீ.தவராஜா(கோளாவில்) ஆகியோரும்.
நிதிக் குழுவில்:-
·         ஊடகவியலாளர்.எம்.வை.அமீர்(சாய்ந்தமருது)
·         எழுத்தாளர் .எம்.பறக்கத்துள்லாஹ்(கல்முனை)
·         எழுத்தாளர்.கல்வி அதிகாரி வா.குணாளன்(அக்கரைப்பற்று).
வெளியீட்டுக் குழு:-
·         கலாபூஷணம் கவிப்புணல் கே.எம்..அஸீஸ்(சாய்ந்தமருது)
·         கவிதாயினி. கலைமகள் ஹிதாயா றிஸ்வி(மாளிகைக்காடு)
·         எழுத்தாளர்.சிவஸ்ரீ பொன் சுதந்திரன் குருக்கள்(பாண்டிருப்பு)
ஊடகக் குழு-
·         சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்..பகுர்தீன்(அக்கரைப்பற்று)
·         ஊடகவியலாளர் யூ.எல்.எம்.றியாஸ்(கல்முனை)
·         ஊடகவியலாளர் என்.கரன்(ஆலையடிவேம்பு)
கலை கலாசாரக் குழு: -
·         எழுத்தாளர் ..கபூர்(நற்பிட்டிமுனை)
·         கலாபூஷணம் பொன் சிவானந்தம்(காரைதீவு)
·         எழுத்தாளர் எஸ்.என்.எஸ்.றிஸ்லி சம்சாட் (அட்டாளைச்சேனை)
நலன்புரிக் குழு :-
·         தேசமான்ய லையன். .எம்..றஷீட்(-துறை)
·         ஊடகவியலாளர் எம்ரீ. .கபூர்(நிந்தவூர்)
·         எழுத்தாளர் .பூவை சரவணபவன்(கல்முனை)
ஆகியோர் சபையோரினால் முன்மொழியப்பட்டு தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதியில் 90 நாள் வேலைத் திட்டம் முன்வைக்கப்பட்டது.அதில் ,
01.அமரத்துவமடைந்த பேரவையின் பிரதிநிதி கமலாம்பிகை லோகிதராஜாவுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் 27.ஒக்டோபர் கல்முனையில் நடாத்துவது.

02.வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ தொகுக்கும் "அம்பாறை மாவட்ட பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள்" தொகுதியும் , நூலுறுப் பெற்ற "வேப்பஞ் சோலை" , "கிழக்கிலங்கை இடப் பெயர் தொல்லியல் ஆய்வு" தொகுதிகளை வெளியீடு செய்து வைத்தல்.

 03.இவ்வருட இறுதிக்குள் அங்கத்தவர்கள் வரையறை செய்து, ஆண்டுப் பொதுச் சபை நிகழ்வை இயற்கைச் சூழலில் மனோரம்மியமாக நடாத்துதல். என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு,பொதுச் செயலாளர்  விபுலமாமணி.வீ.ரீ.சகா தேவராஜாவின் நன்றியுரையுடன் முற்றுப் பெற்றது.
பேரவையின் உறுப்பினர்கள் எழுபத்தி ஐந்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.