புதியவை

சிங்கப்பூர் பிரதமர், அமைச்சர்களை சந்தித்தார் ரணில் விக்ரமசிங்க

சிங்கப்பூர் பிரதமர், அமைச்சர்களை சந்தித்தார் ரணில் விக்ரமசிங்க
சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (16) அந்நாட்டுப் பிரதமர் லீ ஷியேன் லுங்கை சந்தித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரதிப் பிரதமர், பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கை தொடர்பாடல்கள் அமைச்சர் தரமன் சண்முகரத்னம், உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதி அமைச்சர் கே.சண்முகம், வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தகம், தொழிற்சாலைகள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் நிதி அமைச்சர் ஹெங் ஸ்வி கியத் ஆகியாரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.
அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
30f99a5714eb4c0a2c5a56d287033306_L


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.