புதியவை

உயிர் கசியும் உன் ஞாபகங்கள்-(கவிதை) வெலிகம ரிம்ஸா முஹம்மத்கணப்பொழுதொன்றில்
ரணப்படுத்திப் போன
உன் நினைவுகளை
துடைத்தெறிய
முடியாதபடியான
தவிப்பு எனக்குள்!
வாழ்வு கசந்து போன
நிமிடங்களில் எல்லாம்
கடற்கரை மணலிடம்தான்
கவலைகளைக்
கொட்டிவிடுகிறேன்!
தன் பயணம் குறித்த
அதி தீவிரமுடைய
கழுகைப் போன்றே
உன் மீதான நேசமும்
உயர்ந்தபடி!
போலி அன்புகளால்
காயப்பட்ட இதயம்
அசலையும் சந்தேகிப்பதில்
தவறில்லைதானே!
உதறித்தள்ளி
உதாசீனப்படுத்திவிட
நானொன்றும்
திமிர் பிடித்தவளில்லை!
உண்மைகளுக்காக
உயிரை இழக்கவும்
சம்மதம்தான்!
உண்மையாக இருக்க
உன்னால் முடியுமென்றால்
சொல் - என்
உயிரை
உனக்காக மட்டும்
பத்திரப்படுத்துகிறேன்!
துகள்களாக சிதறிப் போன
என் இதயத்தை
அள்ளியெடுத்து
உன் கைகளில்
ஒப்படைக்கிறேன்!!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.