புதியவை

தாயளிக்கும் யாவும் தரம் கவிதை -இலந்தை
என்சிந்தை உன்பெயரை என்றும் சுமந்திருக்கும்
என்சொற்கள் உன்னால்தான் என்றைக்கும் மின்னலிடும்
என்றைக்கும் கன்றுநான், ஈதறிவாய், நாமகளே
கன்றெனக்கு ஊட்டல் கடன்.

அன்றுநான் கேட்டேன் அளித்தாய், கலைவாணி
நன்றுநான் பெற்றவற்றை நல்குகிறேன் – என்றைக்கும்
நீயளிப்பாய், நான்தருவேன், நில்லாத் தொடரிதுதான்
தாயளிக்கும் யாவும் தரம். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.