படித்துப் பட்டம் பெற்றால் போதுமா
பண்போடு நல்பழக்கங்கள் வேண்டுமே
பணிவு அங்கே இல்லையெனில் வந்திடும்
பங்கம் பறந்தோடிடும் அனைத்துமே
பந்தம் பாசம் வேண்டும் வாழ்வினிலே
பணம் தந்திடாது இவை எதனையுமே
பரிபக்குவம் இல்லாத வாழ்வினிலே
பதர் போலாகிடும் அனைத்துமே
பகட்டு வாழ்வினில் புகுந்திட்டாலே
பச்சோந்திதான் பதிவாகிடுமங்கே
பகடைக் காயாக உருண்டிடும்
பரிதாப நிலைதான் அனைத்துமே
பண்பாடு உள்ளத்தில் விதையானால்
பண்படுத்தும் உன் சிந்தைதனையே
பரிசுத்தம் அங்கே நிறைந்திடும்
பளிங்கு போலாகிடும் அனைத்தும்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.