புதியவை

தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை

தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை



இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர், ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 பேர் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்திய பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இருநாடுகளின் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, தமிழக அரசு விட்டுக்கொடுப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயினும், தற்போது வரை தமிழக மீனவர்களின் சுமார் 30 படகுகள் வரை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவை பழுதடையக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்றும் ஜெயலலிதா ஜெயராம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, பாரம்பரிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் மீன்பிடிக்க தூதரக மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழக முதல்வரின் கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.