புதியவை

காரைதீவு பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு

காரைதீவு பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு



அம்பாறை, காரைதீவு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் கல்முனை – அம்பாறை பிரதான வீதியின் காரைதீவு சந்திக்கருகிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து இந்த சடலம் இன்று (02) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகிலிருந்து சிறிய பயணப் பொதியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
சுமார் 68 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், காரைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.