புதியவை

வசந்த சொய்சா கொலை: சந்தேகநபர்கள் எண்மருக்கு விளக்கமறியல்


கராத்தே வீரர் வசந்த சொய்சாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 8 சந்தேகநபர்களை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அநுராதபுரம் மேலதிக நீதவான் நதீகா டீ. பியரத்ன முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வசந்த சொய்சா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரையில் 22 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வசந்த சொய்சாவின் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான ஆர்.ஏ.இரோன் ரணசிங்க என்பவர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடை செய்யுமாறு அநுராதபுரம் பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டார்.
அநுராதபுரம் தலைமையக பொலிஸின் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் பிரிவினர் நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவூட்டியதை அடுத்து, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபர் சிறிதுகாலம் இராணுவத்தின் விசேட படைப்பிரிவில் சேவையாற்றிய ஒருவர் என பொலிஸார் கூறினர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.