புதியவை

மாலைத்தீவு உப ஜனாதிபதி கைதானமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

மாலைத்தீவு உப ஜனாதிபதி கைதானமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாகக்கூறி அந்நாட்டின் உப ஜனாதிபதி கைது செய்யப்பட்டமை தொடர்பில் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் துன்யா மவ்மூன் இன்று கொழும்பில் விளக்கமளித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
விசாரணைகளை முன்னெடுத்துவரும் குழுவினரிடம் நம்பகமான தகவல்கள் உள்ளன. மாலைத்தீவின் பாதுகாப்பு சேவையில் சந்தேகத்திற்கிடமானவர்களும் உள்ளனர். சாட்சியங்களை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர். மேலதிக விசாரணைகளுக்காக மாலைத்தீவு பொலிஸார் சிலரை கைது செய்துள்ளனர். மாலைத்தீவின் உப ஜனாதிபதி அஹமட் அடிப் அப்துல் கபூர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தேசிய விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்த சுயாதீனமான விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார். உப ஜனாதிபதியை கைது செய்யாமல் பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்க முடியாது என தேசிய விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த கட்ட விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு இது முக்கியமான நடவடிக்கையாகும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.