புதியவை

மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச விளக்குகள் ஏற்றி அஞ்சலி


ஒரு வருடத்திற்கு முன்னர் கொஸ்லந்தை, மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்காக இன்று பிராத்தனைகள் இடம்பெற்றன.
மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இன்று காலை 37 மோட்ச விளக்குகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
தெனியாய என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்திலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி, மௌன அஞ்சலி செலுத்தி பிராத்தனையில் ஈடுபட்டனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.