அழகழகாய் கொலுபொம்மை -எங்க
அம்மா வச்ச கொலுபொம்மை !
வழவழப்பாய் ஒருபொம்மை - காந்தி
வழுக்கை தலையாய் ஒருபொம்மை !
கொழுகொழுன்னு ஒருபொம்மை - நம்மைக்
கொஞ்சி அழைக்கும் கிளிபொம்மை !
பழவகையில் ஒருபொம்மை - எங்கள்
பாட்டி போல ஒருபொம்மை !
குடும்பமாக ஒருபொம்மை - குஞ்சுக்
கோந்தை யாக ஒருபொம்மை !
நடும்நாற்றாய் ஒருபொம்மை - அந்த
நாகப் பாம்பாய் ஒருபொம்மை !
அலுப்பின்றி உழைப்பவரை - அம்மா
அடுக்கி வைத்தாள் பொம்மையாக !
கொலுப்பாக்க வாருங்கள் - அவள்
கொடுப்பாள் சுண்டல் உண்மையாக !
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.