
ப
சுபிக் சமுத்திரத்தில் நிலவும் எல்நினோ காரணமாக இலங்கைக்கும் தாக்கம் ஏற்படலாம் விவசாயத் திணைக்களத்தின் காலநிலை தொடர்பான விசேட நிபுணர் கலாநிதி ரஞ்சித் புண்யவர்தன குறிப்பிடுகின்றார்.
இதனால் ஒக்டோபர், நவம்பர் காலப்பகுதிகளில் நிலவும் இரண்டாவது உள்ளகப் பருவப்பெயர்ச்சி மழை முன்னரைவிட அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பசுபிக் சமுத்திர வலயத்தில் 4 அல்லது 5 வருடங்களுக்கு ஒருதடவை வெப்பநிலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதால், அந்த வலயத்திலுள்ள நாடுகளின் காலநிலையிலும் மாற்றம் ஏற்படுவது வழக்கமாகும் என கலாநிதி ரஞ்சித் புண்யவர்தன சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக சிலி, அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் வெப்பநிலை வழமைக்குமாறாக உயர்ந்து காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமையின் காரணமாக இலங்கையின் காலநிலைக்கும் ஓரளவு தாக்கம் ஏற்படும் சாத்தியமுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் காலநிலை தொடர்பான விசேட நிபுணர் கூறினார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.