புதியவை

வித்யா,சேயா சதெவ்மியின் கொலைகளை கண்டித்து யாழிலிருந்து கொழும்பு வரை நடைபயணம்

வித்யா,சேயா சதெவ்மியின் கொலைகளை கண்டித்து யாழிலிருந்து கொழும்பு வரை நடைபயணம்

வித்தியா மற்றும் சேயா சதெவ்மி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான நடைபயணமொன்று இன்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இந்த நடைபயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள இந்த நடைபயணம் யாழ். பஸ் தரிப்பிடத்தில் இன்று (05) காலை ஆரம்பமானது.
இந்த நடைபயணத்திற்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்டவுள்ள இந்த நடைபயணம் சாவகச்சேரி, பளை வழியாக கிளிநொச்சியை இன்று (05) சென்றடைந்தது.
எதிர்வரும் 11 ஆம் திகதி இந்த நடைபயணம் கொழும்பில் நிறைவடையவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்கள் மஹஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளார்கள்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.