புதியவை

வேதமானவன் (கவிதை) -மீ.விசுவநாதன்
கல்லா லடிபட்டும் சொல்லா லடிபட்டும்
கவலை யில்லா சிவனே - காமன்
வில்லா லடிபட்டும் நெல்லால் வழிபட்டும்
விழிகள் திறக்கா "தவனே" !

வில்வ இலையாலும் முல்லை மலராலும்
வேண்டத் தகுந்த சிவனே - இடம்
வெல்ல முலையானே வெல்ல முடியாத
வேத மான "தவனே" !

தேனா லபிஷேகம் பூவால்  லலங்காரம்
தேவா மிருத சிவனே - அகத்
தேனா யிருக்கின்ற தீயாய் ஜொலிக்கின்ற
திருவே ஞான தவனே !

(வாய்பாடு: மாகாய்மாகாய்மாமாமா )
(பிரதோஷ நேரத்தில் எழுதியது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.