
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சந்தர்ப்பர்த்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மகநுவர எனப்படும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலை தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
காலி நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டம், வெடிப்பொருட்கள் கட்டளை சட்டம், மற்றும் துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் கீழ் அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு போதுமானவளவு சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என அரச சட்டத்தரணி ஷனில் குலரட்ண இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் எவன்காரட் நிறுவனம் சார்பில் ஆ|ஜராகியிருந்த சட்டத்தரணிகள் இந்த வழக்கை நிறைவு செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரச சட்டத்தரணி நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விடயங்களை கருத்திற் கொண்ட நீதவான் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளித்து, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மேலதிக அறிக்கையை முன்வைப்பதற்கஞ கால அவகாசம் வழங்கினார்.
இதற்கு முன்னரான வழக்கு விசாரணையின் போது தற்போது ஆயுதக்களஞ்சியசாலை வைக்கப்பட்டுள்ள மகநுவர என்ற கப்பல் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் அதனை வேறொரு கப்பலுக்கு மாற்றுவதற்கு அனுமதியளிக்குமாறு அவன்காரட் நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதன்பிரகாரம் இதற்கு முன்னர் நீதவானால் வழங்கப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு துறைமுக அதிகார சபைக்கும், கடற்படையின் தென் பிராந்திய கட்டளை அதிகாரிக்கும் அறிவிக்குமாறு பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.