புதியவை

கருவில் இறந்த குழந்தை தந்தையானது: அமெரிக்காவில் விநோதம்

கருவில் இறந்த குழந்தை தந்தையானது: அமெரிக்காவில் விநோதம்

அன்றாடம் மிக விநோதமான செய்திகள் வெளியாகின்றன, இந்த விநோதம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
ஒரு அமெரிக்கத் தம்பதி தமது இரண்டாவது குழந்தைக்காக சிகிச்சை மேற்கொண்டனர்.
கணவனின் விந்தணுவை மனைவிக்கு செலுத்தி கர்ப்பம் தரிக்கும் முறை மூலம் குழந்தையும் பெற்றனர்.
அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் இரத்தப் பிரிவு ஏபி பொசிட்டிவ். பெற்றோர் இருவருமே ஏ நெகடிவ் இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இது எப்படி சாத்தியமாகும், விந்தணுவை சேமித்ததில் ஏதோ குளறுபடி நேர்ந்துவிட்டதாகக் கருதி தம்பதியர் மருத்துவமனை மீது முறைப்பாடு செய்தனர்.
இந்த விசாரணையின் முடிவில் வெளியான தகவல்கள் மிகவும் விநோதமாக இருந்தது.
அதாவது, விந்தணு சேமித்ததில் எந்த குளறுபடியும் நேரவில்லை. விந்தணு கொடுத்த தந்தையின் மரபணுவை சோதித்த போது, அவர் இரண்டு விதமான மரபணுக்களைக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதாவது, அவரது மரபணுவில் 10 சதவீத மரபணு வேறாக இருந்தது. அப்போது தான், அவர் தனது தாயின் கருவில் இரட்டையராக உருவாகியுள்ளார். ஆனால், கருவிலேயே இரட்டையரில் ஒருவர் இறந்து விட, அவரது மரபணுவும் இவரது உடலில் சேர்ந்துவிட்டமை தெரிய வந்தது.
கருவில் இறந்தவரின் மரபணுதான் தற்போது விந்தணுவில் எடுக்கப்பட்டு, அந்த விந்தணு மூலமாக குழந்தை பிறந்துள்ளது. இதனை கைமேரா என்று கூறுகிறார்கள்.
இதில் விநோதம் என்னவென்றால், அந்த தந்தை, தனது குழந்தைக்கு தானே சித்தப்பா அல்லது பெரியப்பா ஆனார் என்பதுதான்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.