புதியவை

தெற்கு அதிவேக வீதியின் இமதூவ முதல் கொக்மாதூவ வரையான பகுதி மீள திறக்கப்பட்டது

தெற்கு அதிவேக வீதியின் இமதூவ முதல் கொக்மாதூவ வரையான பகுதி மீள திறக்கப்பட்டது

வௌ்ளம் மற்றும் மண் சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேகப் பாதையின் இமதூவ மற்றும் கொக்மாதூவ வரையிலான பகுதி மீளத் திறக்கப்பட்டுள்ளது.
சீரான வானிலையினை கருத்திற் கொண்டே குறித்த பகுதியை போக்குவரத்திற்காக மீளத் திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
இருப்பினும் இந்தப் பகுதியினூடான போக்குவரத்தின் போது அவதானமாக இருக்குமாறு வாகன சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.
தெற்கு அதிவேகப் பாதையின் இமதூவ மற்றும் கொக்மாதூவ பகுதியில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிவேகப் பாதையின் நடவடிக்கை அதிகாரி குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.