புதியவை

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

மலர்கள் மாலையான பின்னும் 
தொடரும் 
வண்டுகள் !

மாதத்தில் ஒரு நாள் 
மனம் போகும் கொள்ளை 
முழு நிலவு !

பூக்காமல் காய்ப்பதால் 
இனிப்பு அதிகமோ ?
பலா !

பலாவின் ஆசையில் 
கெலாவை இழக்கின்றனர் 
இளைஞர்கள்   !
.
குப்புற விழுந்தும் 
மண் ஒட்டவில்லை மீசையில் 
இல்லை மீசை !

ஆடிப்பட்டம் 
தேடி விதித்தனர் 
வீட்டடிமனைக்கல் !

ஆள் பாதி 
ஆடை பாதி 
நடிகை !

ஓடுவதில்லை மெய்ப்படம்
ஓடுகிறது பேய்ப்படம் 
திரைப்படம் !

பிடிக்க ஆசை 
பிடிபடுவதில்லை 
வண்ணத்துப் பூச்சி !

உடன் வந்தாலும் 
உண்மையில்லை 
நிழல் !         

மறந்து விடுகிறோம் 
நேரம் செல்வதை 
அழகை ரசிக்கையில் !


நேரம் இருப்பதில்லை 
புறம் பேசிட 
உழைப்பாளிக்கு !

ஊக்கப்படுத்துவது ஒரு வகை 
காயப்படுத்துவது மறு வகை 
விமர்சனம் !

பொதுநலம் புரிந்தவர்கள் 
புதைத்தப்  பின்னும் 
எழுகிறார்கள் !

உயரத்தில் பறந்தாலும் 
பார்வை கூர்மை 
கழுகு !

ஆண்டு எல்லோருக்கும் 
இன்று யாருக்காவது 
நீண்ட கூந்தல் !

உயர உயர 
வேந்தனை ஏழைகளுக்கு 
விலைவாசி !

தனியுடைமைக் கொடுமைகள் 
தகர்த்திட ஒரே வழி 
பொதுவுடைமை !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.