புதியவை

போக்குவரத்து அமைச்சர் கிழக்கிற்கு விஜயம்.ஊடகவியலார் முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் நாமல் ஸ்ரீவர்த்தன, உட்பட இலங்கை போக்குவரத்து உயர் அதிகாரிகளும் இன்று 10-10-2015 பி.ப 2.30மணியளவில் கல்முனையில் அமைந்துள்ள போக்குவரத்து சபையின் பிராந்திய தலைமை காரியாலயத்துக்கு விஜயம் செய்தார்கள் வாத்தியங்கள் முழங்க மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார்கள்.அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றுகையில் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற நாளிலிருந்து போக்குவரத்து சபையின் செயற்பாடுகள் தற்போதுள்ள சிக்கல்கள் யாவற்றையும் அறிந்துகொண்டேன் அதில் கிழக்கு பிராந்திய போக்குவரத்து சபை பாராட்டத்தக்க நிலையில் உள்ளதென்பததோடு மேலும் முன்னேற வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.


அத்தோடு கடந்த காலங்களில் அளவுக்கதிகமான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது ஆகையால் சபையை சீராக கொண்டுசெல்வதற்கு ஆட்குறைப்பு செய்யவேண்டியுள்ளது அதற்கான திட்டத்தை விரைவில் அமுல்படுத்துவேனென விலகிச் சென்ற ஊழியர்களின் சேமலாப நிதிக் கொடுப்பனவுகள் பல மில்லியன்களைத் தாண்டியுள்ளது அதனால் மாதாந்த சம்பளக் கொடுப்பனவுகளுக்கு பல மில்லியன் தேவைப்படுகின்றது எனவே எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு எந்தவொரு நியமனங்களும் வழங்கப்பட போவதில்லை அத்தோடு தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சாலை நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதோடு எல்லா ஊழியர்களும் கடமைகளை பொறுப்புணர்ச்சியுடன் கடமையாற்ற வேண்டுமென ஊழியர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.மேலும் சென்ற வாரம் வட பிராந்தியத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் இவ்வாரம் கிழக்கு பிராந்தியத்திலுள்ள சகல சாலைகளுக்கும் விஜயம் செய்யவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.   

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.