புதியவை

விசுவமடு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இராணுவ வீரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

விசுவமடு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இராணுவ வீரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனைகிளிநொச்சி விசுவமடு பகுதியில் யுவதி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதிவாதிகள் மூவருக்கு யாழ் மேல் நீதிமன்றம் இன்று கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2010 ஆம் ஆண்டின் ஜூலை மாதமளவில் விசுவமடு பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயது யுவதி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நான்கு இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளான மூன்று இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபனமானதை அடுத்து, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை அறிவித்தார்.
இதற்கமைய இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 20 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 25 ஆயிரம் ரூபா வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை செலுத்துவதற்கு தவறும்பட்சத்தில் தலா இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், அபராத தொகையை செலுத்துவதற்கு தவறும் பட்சத்தில் தலா இரண்டு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் அறிவித்துள்ளார்.
மூன்றாவது குற்றவாளிக்கு ஐந்தாண்டு கடூழிய சிறைத்தண்டனையுடம் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்தவேண்டும் என்றும் மூன்றாவது குற்றவாளிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அபராத தொகையை செலுத்துவதற்கு தவறினால், மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையும், நட்ட ஈட்டை செலுத்துவதற்கு தவறும்பட்சத்தில் ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான இராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.