வெந்நீர் கோப்பைகளில் சாயம் போகும்
குருத்திலைகளின் பின்புலம்
பாமரத்தின் தோட்டக் காடாகி
மலை செறிய துளிர்க்கின்றன
குருத்திலைகளின் பின்புலம்
பாமரத்தின் தோட்டக் காடாகி
மலை செறிய துளிர்க்கின்றன
இரத்தம் சொட்ட நிறமூறும்
தூரிகைகளின் வலியுணரா குரல்வழி
தேயிலைகளாய்
தேயும் இலைகள் மொழி பிரிக்கப்பட
உற்சாக பணமாய் உயிர் பெற்று
உலகின் உதடுகளில்
இரக்கமற்று இறங்குகிறது
மௌனித்த குருடாய்
யாரும் கண்டெடுக்க முடியாதபடி
தலை விதியில் புதை படுகின்றன
கனவுகளின் மூட்டைகள்
தலை விதியில் புதை படுகின்றன
கனவுகளின் மூட்டைகள்
முகிழ்த்தெழம் பிரயாசங்களுடன்
வெடிக்கும் வித்தினதும் அவா
கடைசி தளிரும் கருக
வேரின் காலடியில்
மீள் சுழற்சி எருவென மாறி
பாசன பசளையாய்..
வெடிக்கும் வித்தினதும் அவா
கடைசி தளிரும் கருக
வேரின் காலடியில்
மீள் சுழற்சி எருவென மாறி
பாசன பசளையாய்..
கண்முன்
விரிந்து கிடக்கும் பச்சைவெளி
ஒரு புலர்விலேனும்
வாழ்வின் லயத்தில்
குளுமையூட்டியதில்லை
என்ற பெருங் குறையுடன்
பனிப் பாறைகளில் உலர்ந்துதிரும்
மலை வாசத்துப் பூவென
வானம் பொய்க்க
வலியுடன்
அந்திமத்தில் தேய்கிறது ஒரு கூடை நிலா.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.