புதியவை

நீர்க்குமிழி கவிதை -சுசீந்திரன்.சென்னை


 

சறுக்கு பாலத்தின் உருக்கு மேனி வாசம்
ஒவ்வொரு பொழுதும் பாடம் படித்து 
நரம்புத் தோணிகள் அறுந்து
நிலையிலாது ஆடும்..

இவன் வைப்பாற்றில் 
விட்டுச் சென்றவைகளை
கபளீகரம் செய்து
ரத்த சம்பந்தங்கள் பழையாற்றில் 
அரிசிப் பிண்டங்களை கரைத்து
அத்தியாயத்தை முடித்தார்கள்...

வாழ்நாளெல்லாம் வானம் 
வசப்படுமென்று காத்திருந்ததிலும் 
நெருப்பில் சுட்ட நிலாவை தண்ணென்று
தம்பட்டத்தில் பொய்யிட்டதிலும் 
வெள்ளை காகிதங்களுக்கு
வண்ணம் பூசியதோடு கழிந்து போனது 

வலிகளின்
வழிகளையும் காணாமல் 
வலிப்பவர்
விழிகளையும் பேணாமல் 
வந்தவழி இல்லாமல்
வேறோர் வழியில்
மீண்டும் மண்ணுக்கே போனான் ..
வந்தபோதும் நினைவில்லை 
போகும்போதும் நினைவில்லை
வந்து போனவைகள் நிரந்தரமில்லை.

எம்மாற்றமுமில்லாமல் 
இந்த சமுத்திரங்கள் மட்டும்
காலை-
கரையை நோக்கியும் 
மாலை - 
கரையிலிருந்தும்
காற்றை அனுப்பி வாங்கின. 




No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.