புதியவை

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்


ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டை வந்தடைந்தார்.
ஜனாதிபதியை வரவேற்கும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பெருந்திரளான மக்களும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
கடந்த 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார்.
இதன்போது, நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரட்டைக் காரணிகளை எட்டுவதே இலங்கை அரசாங்கத்தின் இலக்காகும் என அவர் தெரிவித்திருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.