புதியவை

தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதூவ முதல் இமதூவ வரையான பகுதி தொடர்ந்து மூடப்படும்

தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதூவ முதல் இமதூவ வரையான பகுதி தொடர்ந்து மூடப்படும்

தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதூவ மற்றும் இமதூவ இடையிலான பகுதியை தொடர்ந்தும் மூடுவதற்கு, தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
இதற்கு முன்னர் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவிய பகுதிகளுக்கு மேலாக மற்றுமொரு இடமும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக ,அதிகவேகவீதியின் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபனாயக்க தெரிவித்தார்
குறித்த பகுதியில் இன்று முதல் விரிவான ஆய்வுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர் எம் எஸ் பண்டார குறிப்பிட்டார்
மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதியின் அடியில் மற்றும் நடுப்பகுதியில் காணப்படும் நீரை விரைவில் வௌியேற்ற வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்
இருப்பினும் குறித்த பகுதியில் வௌ்ளம் ஏற்படும் பட்சத்தில் குறித்த பணியினை முன்னெடுப்பது தாமதமடையலாம் என. ஆர். எம் .எஸ். பண்டார சுட்டிக்காட்டினார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.