புதியவை

ராஜகிரிய,மஹரகம பகுதிகளில் புதிய போக்குவரத்துத் திட்டம்

ராஜகிரிய,மஹரகம பகுதிகளில் புதிய போக்குவரத்துத் திட்டம்



ராஜகிரிய மற்றும் மஹரகம பகுதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக புதிய போக்குவரத்துத் திட்டங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அமைவாக ராஜகிரிய பகுதியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஒத்திகையொன்றும் நடைபெற்நதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் மஹரகம நகரில் இதற்கான ஒத்திகை நடைபெறுவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
வெலிக்கடை சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்திவரையிலும் மற்றும் தேவிபாலிகா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து தாமரைத்தடாகம் வரையான வீதியில் முற்பகல் 10.30 இலிருந்து 11.30 வரை வாகனப் போக்குவரத்து ஒத்திகை நடடைபெற்றுள்ளது.
இதே போன்று நாளைய தினமும் காலை 7.30 முதல் 8.45 வரையிலான காலப் பகுதியில் ஒத்திகை நடவடிக்கை நடைபெறவுள்ளது.
இந்த வாகனப் போக்குவரத்துத் திட்டத்தினை திங்கட் கிழமை காலை 7. 30 முதல் 8.45 வரையான காலபகுதியில் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.