புதியவை

உண்மைக்காதல் (கவிதை) டாக்டர் ஆரிப்

காதல் அது
எல்லோருக்கும் வரும்
ஆனால்...,
உண்மைக்காதல்
விரல் விட்டு எண்ணும்
சிலருக்குத் தான் வரும்.
அதில் என் மனைவியும்
ஒருத்தி என்பதில்
எனக்குப் பெருமிதம்.
நான் அழகில் கம்மி தான்
இருந்தும் என்னைக்
கல்லூரி நாட்களிலேயே
அழகாய்க் காதலித்தவள்
அவள்...
கடிதங்களில்லை
பேச்சுக்களில்லை
தொடர்புகளேயில்லை
ஆனால்...
மனசார நேசித்தாள்
என்னை மட்டும்.
எனக்காக அவள்
செய்த தியாகங்கள்
பற்பல...
பல்கலைக்கல்விக்கு வைத்த
முற்றுப்புள்ளி அன்று
எனக்குப் பெரிதானது
ஆனால் இன்று...
உணர்கிறேன் அது
என் பலவீனமென்று.
வசதியான வாழ்க்கை
வாழ முடியுமாயினும்
மாறினாள் எனக்காக
எளிமையாக வாழ.
என் கரம் பிடித்ததால் தான்
கஸ்டம் என்பது என்னவென்று
அனுபவித்தாலும் மனநிறைவாய்
தாங்கிக் கொண்டவள் அவள்.
எங்கே அவளை விட
அழகில் நான் கம்மி
என்று மற்றவர்கள்
எண்ணி விடுவார்களோ
என தன்னையே மாற்றிய
அவளின் காதல் இன்றும்
உண்மைக்காதல் தான்.
அன்றும் சரி இன்றும் சரி
எதிலும் முதலிடம்
எனக்கே தந்திடும்
அவளின் காதல் என்றுமே
உண்மைக் காதல் தான்.
விதிவசத்தால் நான்
தடம்புரள நேர்ந்த
போது கூட என்னைப்
புடம் போட்டு நேராக்கிய
அவளின் காதல் இன்னும்
உண்மைக்காதல் தான்.
ஒரு பெண் அனுமதித்தால்
மட்டுமே ஒரு ஆணிணால்
அவள் மனதில் தடம்
பதிக்க முடியும் என்று
அடிக்கடி சொல்லும்
அவளின் காதல் அழியாத
உண்மைக்காதல் தான்.
கணவன் வீட்டிலில்லை
என்பதைத் தெரிந்து வரும்
அழைப்பில் நேரம் கழிக்கும்
ஒரு பெண் உண்மையான
மனைவியாக இருக்க
முடியாதென்று கூறும்
அவளின் காதல் தூய்மையான
உண்மைக்காதல் தான்.
காதல் பேசாது ஆனால்...
உண்மைக்காதல் பேசும்
என்பதற்கு என் மனைவி
ஒரு உதாரணம்...
அவளின் காதல்
உண்மைக்காதல் தான்...
அதனால் தான் இணைந்தோம்
இல்லற வாழ்வில்

இது என் மனைவிக்காக)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.