புதியவை

வீடு (கவிதை)சோலை கிளிநான் ஒரு தும்புத்தடி
குப்பையை கூட்டி ஒதுக்குகிறேன்
இந்த வீடு முழுக்கக் குப்பை
அடைந்து கிடக்கிறது
கூட்டிக் கூட்டி வீட்டை
சுத்தமாக்குகிறேன்
*
நான் கண்ணால் பார்த்த குப்பைகள்
காதால் கேட்ட குப்பைகள்
வாயால் பேசிய குப்பைகள்
மனதால் எண்ணிய குப்பைகள் என்று
ஆயிரம் குப்பைகள் அழுகிய குப்பைகள்
*
அள்ளி எடுத்து எறிகிறேன்
இந்த அழகிய இல்லம் பாழ்படக் கூடாது
இதைக் கட்டியவன் கண்கள் இதிலேதான் இருக்கும்
துப்பரவாய் வைத்தால்தான்
விளக்குவைப்பான் முதலாளி
*
இந்த வீடு என்னுடையதல்ல
*
இது நானாக உசும்பினால் நம்முடைய வீடா

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.