புதியவை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் கைதுஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறை வடக்கு கடற்பரப்பில் குறித்த 7 மீனவர்களும் நேற்றிரவு கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார்.
நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் படகொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்திய மீனவர்கள் 7 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரமேஷ்கண்ணா குறிப்பிட்டார்.
நேற்று (01) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் மொத்தமாக 28 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.