புதியவை

விவசாயம் செய்யப்படாத அனைத்து காணிகளும் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி

விவசாயம் செய்யப்படாத அனைத்து காணிகளும் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி

அரசாங்கத்திற்கு சொந்தமான விவசாயம் செய்யப்படாத அனைத்து காணிகளையும் எதிர்காலத்தில் உணவு உற்பத்திற்காக பயன்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
இரணைமடுவில்  (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 
உணவு உற்பத்தி தேசிய திட்டத்தின், தேசிய நிகழ்வு இன்று (05) இரணைமடுவில் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வரவேற்றார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் இராணுவம் பயன்படுத்திய 613 ஏக்கர் காணியை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.
அதன் பின்னர் ஜனாதிபதி இந்த தேசிய நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதே வேளை விவசாயிகளுக்கு பசுக்கள் மற்றும் பயிர் விதைகள் என்பனவும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
இரணைமடு பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மீன் வளர்ப்பு மத்திய நிலையத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அத்துடன் ஜேர்மன் நிதி உதவியுடன் இரணைமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.