புதியவை

அவன்காட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவிப்பு

அவன்காட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவிப்புஇலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசித்த அவன்காட் என்ற கப்பல் தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் ஆ​லோசனையின் பிரகாரம் இந்த கப்பல் குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தளபதி நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தார்.
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்த கப்பல் இலங்கை கொடியுடன் காணப்பட்டமையால், அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தமை தொடர்பில் விசாரணை நடத்த முழுமையான அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த கப்பலில் 30 பணியாளர்கள் காணப்பட்டதாகவும் அதன் கப்டன் யுக்ரேய்ன் நாட்டவர் எனவும் கடற்படை தளபதி கூறியுள்ளார்.
கப்பலில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
இந்த கப்பல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பூர்வாங்க விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் விசாரணையின் மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக காணப்பட்டதால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக கடற்படை தளபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு காரணமாக குறிப்பிட்ட கப்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததாகவும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜயகுணரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு தொடர்பாகவும், தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டும் இந்த விடயங்களை வெளியிட்டமைக்கு கடற்படை தளபதிக்கு நியூஸ்பெஸ்ட் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
அத்துடன் இந்த சம்பவத்திற்குப் பொறுப்புகூற வேண்டிய தரப்பினர் இதுவரை ஏன் கைதுசெய்யப்படவில்லை என வினவியபோது, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்வதற்கான அதிகாரம் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்திடமே உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.