புதியவை

நா கூர் ஹனீபா கவிதை (பி எம். கமால், கடையநல்லூர்)


கூறுகெட்ட கோட்டான்கள் 
கூவுகின்ற சோலையில் 
மாறுபட்டுக் கூவிநின்ற
மனிதக் குயில் !

வெண்கலக் குரலில் 
வெண்ணெய் தடவி 
விண்கலமேறும் 
இவரின் பாட்டு !

இவரின் 
வார்த்தை உச்சரிப்பால் 
தமிழ்த் தாயும்கூடத் 
தலையாட்டி இரசிப்பாள் !

அரபி உச்சரிப்போ 
அமரர்களையும் 
அமரவைத்துக் 
கேட்கவைக்கும் !

துட்டுக்கும் மெட்டுக்கும் 
தோளில் விழுகின்ற 
துண்டுக்கும் பாடாமல் 
தொண்டுக்குப் பாடி 
பொழுதளந்த  பாடகர் !

பெருமானாரின் 
பெயர்சொல்லும் போதெல்லாம் 
அடக்கம் இவருக்குள் 
அடங்கிக் கிடக்கும் !

பாசத்தால் கண்கள் 
பனித்து நனையும் !

இவர் 
ஒவ்வொரு வீட்டிலும் 
உட்கார்ந்து பாடுகின்றார் !
பெண்களோ தங்கள் 
முக்காடு சரிசெய்து 
முழுமனதும் தருகின்றார் !


கடவுச்சீட்டு 
இல்லாமல் நம்மை
காபாவுக்கு கைபிடித்து 
கொண்டுபோய் மனங்கள் 
குளிரச் செய்தார் !

பாடல்வரிகள் 
இவரின் 
குரல் குதிரையேறி 
வான முகடுகளில்
ஆரோகணித்தன !

ஆமாம் !
இவரின் தீன் முரசு 
வான்முரசாக 
வலம்வரு கின்றன !

ஈரமும் வீரமும் 
இருக்கின்ற இவர்குரலில் 
இடியோசை சிலநேரம் 
குடிபுகுவதுமுண்டு !

அருளிசை முரசென்று 
அகிலத்தார் சொல்கின்றார் !
ஆமாம் !
இவர் 
அண்ணா இல்லத்து 
அருளிசை முரசுதான் !
பாதை மாறாத 
பயணம் தொடருகின்ற 
நா  கூருடைய 
நாயனின் புகழ்பாடும் 
நாகூர் தந்த 
தீன் முரசும் இவர்தான் !

காதுக்குப் பூசுற்றும் 
கசடான உலகத்தில் 
இவர் 
காதுக்குள் பூமணத்தை 
இசைவாளி யில்அள்ளி 
இறைத்து நின்றார் தினமும் !

பாலைவனத்தில்
இவர் கச்சேரி செய்தால்
புல்  மட்டுமல்ல  
பூக்களும் இதழ் விரிக்கும் !


இவரின்
பக்திப் பாடலைப் 
பாறைகள் கேட்டாலோ 
பனியாய்  உருகிப் 
பரமனுக்கு நன்றிசொல்லும் !

இவரின் குரல் 
குரலல்லவிரல் !
கூனிக் குறுகி
குப்புற விழுந்து 
ஏணிக்காக ஏங்கிக் கிடக்கும் 
மனிதனைத் தட்டி 
எழுப்புகின்ற விரல் !

உள்ளவாசல்களில் 
இவரின் பாட்டு 
பட்டுவிரித்தது !
சீர்கேட்டு நாணயங்களைச் 
சேமித்த உண்டியலை 
இவரின்
பாட்டு வரிகள் 
போட்டு உடைத்தன !

இவர் 
அண்ணா இல்லத்தில் 
குடியிருந்த  போதினிலும் 
கண்ணான இஸ்லாத்தைக்  
கைவிட்டு விடவில்லை !

இஸ்லாத்தின் -
கடமை கண்ணியம் 
கட்டுப்பாடுகளை 
விட்டுக் கொடுக்காமல் 
வீரமுடன் மேடைகளில் 
கச்சேரி கண்ட 
கடமை வீரரிவர் !

இவரின் 
பாட்டு வரி அலைகள் 
மனக்கடலைத் 
தாலாட்டும் !

இறைவா ! இவரின்
மண்ணறையை
உன்
மகத்துவத்தால்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.