புதியவை

தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது

தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது


தங்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்க் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மெகஸின், அனுராதபுரம், வெலிக்கடை, போகம்பர, திருகோணமலை, களுத்துறை, மட்டக்களப்பு, பதுளை, காலி, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மற்றும் மொனராகலை ஆகிய சிறைச்சாலைகளிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலைமையின் கீழ் தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக தலைநகரிலும், வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைதிகள் விடயம் குறித்து மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
இதேவேளை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகள் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த 12 பேரும் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.
இதுதவிர 8 கைதிகளுக்கு ஏற்கனவே சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை பாரிய குற்றச்செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகாத கைதிகள் அனைவரையும் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற தொ​லைபேசி உரையாடலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பீ.பீ.சீ. உலக சேவைக்கு தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகள் சிலருக்கு இந்த தகவலை தொலைபேசி ஊடாக அறிவித்தாகவும் எதிர்கட்சித் தலைவர் பீ.பீ.சீக்கு கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.