புதியவை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஜப்பான் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஜப்பான் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளார்



ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (06) அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அடுத்தப்படியாக இலங்கை பிரதமர் ஜப்பான் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் கயான் சம்பத் தெரிவித்துள்ளார்.
இன்று (06) முற்பகல் ஜப்பான் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள பிரதமர், ஜப்பான் பிரதமரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இதனைத் தவிர மேலும் சில தரப்பினருடனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
அமைச்சர்களான மங்கள சமரவீர, சுசில் பிரேமஜயந்த, ரவி கருணாநாயக்க ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள எமது விசேட செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.