புதியவை

ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகளும்,கவிஞர்களும்


தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நடாத்திய 
ஒக்டோபர் மாத கவிதைப்போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்று "கவியருவி" பட்டத்தை பெற்றுக் கொள்கின்றார்   

கடைய நல்லூர் கவிஞர் முஸ்தபா கமால்

வேடம் கலைகிறது !

இந்தியாவில் 
மனிதம் மறக்கப்பட்டு
புனிதம் பேசப்படுகிறது !
பசுக்கறி தின்பவன்
சாதுவாகவே இருக்கிறான் !
சாது என்று
சொல்லிக் கொள்பவன்
மனிதக் கழுத்தை
அறுக்கிறான் !
புத்தன் பிறந்த மண்ணில்
ரத்தம் ஓடுகிறது !
புத்தன் வேஷம் போட்டவன்
மவுனிக்கிறான் !
ஆம் !
இப்போது
வேடம் கலைகிறது !
திரை விலகுகிறது !
திரைக்குப் பின்னால்
வேடம் போட்ட
ஓநாய்களும்
பருந்துகளும் !
இந்தியப் பலிபீடத்தில்
அஹிம்சை ஆடு !
காந்திகளே ! வாருங்கள் !
உங்கள் கைத்தடிக்கு
இப்போது
வேலை கிடைக்கும்
வேளை வந்துவிட்டது !
மனித மிருகங்களை
வேட்டையாடுங்கள் !
விவேகானந்தர்களே !
விரைந்து வாருங்கள் !
நீங்கள்
போதித்த மதமும்
போதிமரமும்
இப்போது
கயவர்களால்
கற்பழிக்கப்படுகிறது !ஒக்டோபர் மாத கவிதைப்போட்டியில் இரண்டாவது  இடத்தைப் பெற்று "கவித்தீபம் " 
பட்டத்தை பெற்றுக் கொள்கின்றார்  திருகோணமலை- கவிக்குயில் சிவரமணி
உயிரின் அளவு என்ன..??

உயிர்த்திசுக்களின் சேர்க்கையில்
உலக அதிசயமாய்
உயிர்களின் படைப்பு .
அவ்வுயிருக்கு உண்டோ மதிப்பு
உண்மையில் உயிரின் அளவு தான் என்ன..?

பிறப்பும் இறப்பும் நிச்சயிக்கப்பட்டது
இறப்பு எப்போது என்பது விடுகதையானது
எப்படி என்பது முடிவாகா முடிவானது
இதில் இடைப்பகுதி வாழ்வெனில்
இதற்குள் நடப்பது ?

பிறந்தவர் மடிவது இயற்கை
அநியாய இறப்பை என்சொல்ல
நோய்களால் பலர்
விபத்துக்களால் பலர்
போரகளால் பலர்
விரோதமும் குரோதத்தினால் பலர்
எதிர்பார்க்கா நேரம் எதிர்பார்க்கா மரணம்
எந்தநேரம் மரண தேவன் தழுவுவானோ ?
இது தான் நியதி இங்கு உயிரின் அளவுதான் என்ன..?

கொடிய பூமியில் திக்கெட்டும் பகை
வேடதாரிகளும் காமுகர்களும்
மழலைகளைகூட இரையாக்கும் காட்டேறிகளும்
உறவாடி கொல்லும் நரிகளும்
வாழவேண்டிய வயதில் வாடி உயிரிழக்கும் உயிர்கள்
ஊணப்பட்ட உலகில் பாவப்பட்ட அவதாரங்கள்
இங்கு உயிரின் அளவு தான் என்ன ..?

உயிருக்கு மதிப்பில்லை
உயிரை எடுப்பவன் கூட
தனக்கென வந்தால்
உலகமே இருள அழுகின்றான்
பிற உயிரை துச்சமாக நினைக்கின்றான்
உயிரின் அளவு உயிர்பிரியும் போதா புரியும்

உருவம் உயிருக்கு இல்லை
உடலுக்கு தான்
உடலை வருத்தி உயிரை போக்காதீர்கள்
பெறுதற்கரிய உயிர்
பெறுமதிக்கு இணையில்லை
உயிரின் அளவு கணிக்க எனக்கும் உரிமையில்லை
ஆனாலும் கேட்கின்றேன் உயிரின் அளவு தான் என்ன..?


ஒக்டோபர் மாத கவிதைபபோட்டியில் மூன்றாவது   இடத்தைப் பெற்று கவின்கலை " 
பட்டத்தை பெற்றுக்கொள்கின்றார்  வசீம் அக்ரம்
நான் கொஞ்சம் பேசலாமா.!
மரம் நான்
கொஞ்சம் பேசலாமா
காது திறந்து

நெஞ்சால் கேட்கலாமா
மனசிருக்காம் மனிதருக்கு
எழுதியிருந்தது எழுத்தில்
மரணித்து பலநாலாகிவிட்டது

யதார்த்தத்திலது
என்னப்பாக்கால மானிடம்
படிப்பறிவில்லா புத்திசாலிகளாம்
படித்த முட்டாளென்பேன்

என்கால மானிடதனை
பொன்முட்டையிடும் வாத்தாமென்னை
பாதுகாத்திடவே மனமில்லை
அறுத்து பலியிடவே

ஓடோடி வருகிறது பணமுதலைகள்
நியாயமார்ரே கொஞ்சம்
நில்லுங்கள்
மரப்பிஞ்சு என்னை
நட்டுங்கள்

உம் சந்ததியினருக்கு உதவிடவே
எமை வாரிசாக தத்திடுங்கள்
உம் பிள்ளைகளுக்கு தானே
நல்லெதிர்காலத்தினை தந்திடுவோம் நாமே..!
ஒக்டோபர் மாத கவிதைப்போட்டியில்  சிறப்புக் கவிதைக்கான  கவி நெழி பட்டத்தை பெற்றுக் கொள்கின்றார்  கல்முனை   கவிஞர் றிஸ்க்கான்மன்ஸில

அன்றே செத்துவிட்டாள்-
விஷமுற்கள் கொட்டிக்கிடக்கும்
பாதையென அறியாப்பாவையவள்
பட்டாம்பூச்சியாய் தனிமையில்
சிறகடித்து வந்தாள்...

சிறகுடைக்கப்படுவொமென
சிறுதும் எண்ணாத அவளின்
சிறுபிள்ளைத்தனமான எண்ணம்
சின்னாபின்னமாக்கப்பட்டது..

தனிமையை உணர்ந்த நேரத்தில்
தெருவே வெறிச்சோடி
ஓர் மயான அமைதி அங்கே
மண்டியிட்டுக் கிடந்தது..

மனதிற்குள் இலேசான பரபரப்பும்
இதயத்துடிப்பும் இருமடங்காய்போனது
பின்னால் வந்த ஒரு விஷமுள்
அவளின் கற்பைக்குத்த எத்தனித்தது..

ஒரு பிச்சைக்காரியைபோல்
அவன்முன் மண்டியிட்டு
கண்ணீராய் வடித்து கதறியபோதிலும்
கரைந்திடவில்லை காமனின் உள்ளம்..
பிஞ்சுமலர் காமக்கரங்களால்
கசக்கப்பட்டுக் கொண்டிருந்தது
தெருவில் இட்ட அவளின் அவலக்குரல்
அகிலவிளிம்புவரை அதிரவைத்தது..

கூரிய ஆயுதம்கொண்டு சக்சக்கென்று
குத்தி உயிரை மாய்த்துக்க் கொள்வது
போன்ற உணர்வுகள் அவள்
உள்ளத்தை ஆட்சிசெய்து கொண்டிருந்தது..

பின்னால் பதுங்கிய காமன்
பிஞ்சு உடலில் முரட்டுத்தனம்கொண்டு
கட்டியனைத்து முத்தமிட்ட கயவனின்
முதற்சத்தம்கேட்ட நொடியினிலே அவள் இறந்துவிட்டாள்..!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.