புதியவை

குருவிக்கூடு (கவிதை) மு.இ.உமர் அலி
கொத்தனார் வீடு கட்டுவதை
சற்றுமே உற்றுப்பார்க்காத சிறுவன்
சொண்டினால்
குருவி கூடு கட்டுவதை
ஒளித்திருந்து
முற்றுமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

பெட்டிகளை அடுக்குகிறான்
ஏணி கட்டி ,
எட்டியதை ஆருக்கும் தெரியாமல்
தொட்டும் பார்க்கிறான்
ஆட்டிவிட்டு அசைவினை
அண்ணாந்து கொண்டு சதா
உற்றுப் பார்க்கிறான் !

அங்கே
கருங்கல்லில்லை
பெருந்தூணுமில்லை
அந்தக்குருவிக்கு
பட்ட கடனை
திரும்பக் கொடுக்கவேண்டிய
கவலையுமில்லை !

பொய்க்கணக்குமில்லை
கொத்தனாரின் புழுகுமில்லை
ஏய்ப்பும் இல்லை
இழி பிழைப்பும் இல்லை!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.