புதியவை

அவன்ற் கார்ட் மெரிடைம் சேர்விஸ் நிறுவனம் தெளிவூட்டல் அறிக்கை வெளியிட்டுள்ளது

அவன்ற் கார்ட் மெரிடைம் சேர்விஸ் நிறுவனம் தெளிவூட்டல் அறிக்கை வெளியிட்டுள்ளது


அவன்ற் கார்ட் கப்பல் தொடர்பான விடயங்களைத் தெளிவூட்டி, அவன்ற் கார்ட் மெரிடைம் சேர்விஸ் நிறுவனம் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவன்ற் கார்ட் மெரிடைம் சேர்விஸ் நிறுவனத்தின் நிர்வாக பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ரொஹான்
கடுவெலவினால் கையொப்பமிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளின் அனுமதி மற்றும் தெளிவின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி எம்.வீ. அவன்ற் கார்ட் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து செங்கடலை நோக்கி சென்றதாக அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது ஆயுதங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பில் ரக்னா லங்கா நிறுவனத்தினர் பொறுப்பு வகித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்ட போலியான பிரசாரங்களினால் அந்நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக அவன்ற் கார்ட் மெரிடைம் சேர்விஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கப்பல் மீண்டும் வருவது தொடர்பில் ரக்னா லங்கா நிறுவனம் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், கடற்படை உட்பட குறித்த பிரிவுகளுக்கு அறிவித்திருந்த நிலையில், இந்த கப்பல் வருவது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என கடற்படை கூறுவது நிந்திக்கத்தக்க செயலென்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.