வீடுவீடாய் வருகிறார் அண்ணாச்சி..
தேர்தலுக்கு நிக்யாரு...
ஒரு கள்ளச் சிரிப்போடு,
ஒரு காக்காப் பார்வையோடு ,
போலிக் கும்பிடோடு,
"அம்மா ,ஐயா ஒங்க பொன்னான "
என்று அண்ணாச்சி சொல்லி முடிக்கும் முன்னையே
"வாக்குகளை உங்களுக்குப் போடணும் அதுதானே"..
"ஆமாம்" என்று ஒரு அசட்டுச் சிரிப்பை
அண்ணாச்சி காட்டினாரு...
"சரி போடுதோம்..ஒரு கேள்வி...அதுக்கு
நீங்கதான் பதில் சொல்லணும் .."
"ம்..சொல்லுதேன்.." அண்ணாச்சி நெளியுதாரு...
"இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பு"ன்னு
சொல்லுதாங்களே...அப்போ
சாதி வாரி வெலைவாசி இருக்குமா?
சாதி வாரித்தான் வரிபோடுவாங்களா?
யேன் கேக்கேமுன்னா
அண்ணாச்சி
சாதிவாரி பசி வராதுல்லா
அதான்..."
அண்ணாச்சி வேகமா நடந்தாரு
அடுத்த வூட்டு வாசல்ல
ஓட்டுப் பிச்சைக்கு போயி நிக்யாரு
மானங்கெட்டு....சீ...
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.