புதியவை

கொட்டதெனியாவ சிறுமி கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக மனுத்தாக்கல்

கொட்டதெனியாவ சிறுமி கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக மனுத்தாக்கல்

கொட்டதெனியாவ சிறுமி கொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவன் மற்றும் மற்றைய நபர் தொடர்பாக பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்தார்.
குறித்த மாணவன் மற்றும் மற்றைய நபர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அவர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி அவர்களுக்கு சமூகத்தில் அவப்பெயரை ஏற்படுத்தியமை தொடர்பிலும் தமது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்
மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கொழும்பு வடக்கு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்
இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டே விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
17 வயது மாணவனை கைது செய்வதற்கு போதிய சாட்சியங்கள் காணப்பட்டனவா? என்பது தொடர்பில் விசாரணைகளின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன் குறித்த மாணவன் மற்றும் மற்றைய நபர் மீதும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தரப்பத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விசாரணையின் இடைக்கால அறிக்கை நாளை மறுதினம் பொலிஸ்மா அதிபருக்கு கையளிக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.