புதியவை

தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
தமிழ் சிறைக்கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர்,  இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) காலை சென்று கைதிகளுடன் உரையாடிய பின்னர் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்து, தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கைதிகளுக்கு எடுத்துரைத்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
நவம்பர் 7 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து கைதிகளின் போராட்டத்தை முழுமையாக முன்னெடுப்பதற்கு ஒத்தழைப்பு வழங்குமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் இன்று (17) காலை அடையாள உண்ணாவிரதமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.