புதியவை

பொன்னெழுத்துப் பீங்கான் - தீரன் ஆர்.எம். நவ்சாத்என்ட கண்டுமணி மகளாருக்கு... பத்துமாசம் செமந்து பெத்த ஒங்கு ம்மா சவரியத்தும்மா பேசி அனுப்புற கடசிக் கெசட்டுப் பீசி இது.. நீ லண்டனுல இரிந்து அனுப்பின காய்தமும்..காசியிம்;; கெடைச்சிச்சு.. நம்முட போஷிமாஸ்டரு எல்லாம் வாசிச்சுக் காட்டினாரு.. அதக் கேக்கக்குள்ளேயே என்ட ரெண்டு கண்ணுலயும் தண்ணி.. என்ட மகளே... ஒன்ன நெனச்சிக் கொளறிட்டன்டா..மளே... நீ வெளிநாட்டுல..கங்காணா தேசத்துல... நா ஞ்ச ஊர்ல..உள்ளதும் ஒரு கொம்புளப் புள்ள நீ.. ஒன்னப் பிரிஞ்சி நான் எப்பிடி மகள்  நெம்மதியா இரிக்கிற....?

     எண்ட கண்டு மஹளாரே.... நீ அந்தக் கடிதத்தோட அனுப்பி இரிந்த அந்தப் போட்டோவுல இரிக்கிற ஒனக்குக் கூட நிக்கிற அந்த வெள்ளக்காரக்காரன் ஆரு புள்ளேய்...? என்ட மனசு கெடந்து மறுகுதுடி... அவனுக்கும் ஒனக்கும் என்ன ஒறவுஹா புள்ளேய்.. . கூடப் படிக்கிறவனா...? வேல செய்யிறவனா..? கூட இரிக்கிறவனா...? அவனப்பத்தி நீ ஒண்டும் எழுதல்லியே... ஏண்டா மஹளே... ஆருஹா அவன்..?

     அவனத்தான் நீ கலியாணம்கிலியாணம் முடிக்கிற ண்ட மாதரி... .அப்பிடி ஒரு எண்ணம் உன்ட மனசில இரிந்தா  அத உட்டுர்ரி.. ராசா..மஹளே.. அந்த அறாமான வேல நமக்கு வாணா.. ஒனக்கு தெறிச்சிப் பாத்து மாப்புள்ள எடுக்க எனக்கித் தெரியிம்.. ஊருல கன சனம் இரிக்கி... உன்னக் கேட்டு..ஊடுவளவும் ஒண்டும் வேணா ண்டு சொல்லி ஒன்னக் கேட்டு  வேலம் வெதானட மகன் லாக்குத்தருப் பொடியன்  வெசளம் அனுப்பின... நம்மட பள்ளிக்குடப் பிரிஞ்சிப்பில்லும் அவர்ர ரெண்டாவது மகன் எஞ்சினியருக்கு  கேட்டு நடக்காரு.. மறுகா நம்முட காசிம்போடிமாமாட மகன் ஒரே சாடமாடயா கேட்டுட்டுத்தான் இரிக்காரு... ப்பிடி ஊருல  மாப்புள்ளமார் அடிபுடி... எத்தினயோ சனம் காத்திரிக்கி ஒண்ண எடுக்க... நீ அங்க வெளிநாட்டுல அப்பிடியிப்பிடி ஒண்டும் செஞ்சி பொட்ராத ம்மா......

     ஒண்ட கால் ரெண்டையும் புடிச்சன்... ஒன்னயப் பெத்த வவ்த்துல நெருப்ப அள்ளிக் கொட்டிராத... நான் வருத்தக்காரி... வாள்ர வயசில புரிசனப் பலி குடுத்த கைம்பொண்சாதி...... நாப்பது வரிசமா மான ஒளுக்கத்தோட வாள்ர இசலாமான கொம்புள நான்...நீ எள்ட ஈரக் கொளுந்து...  என்ட சொத்தையில கரியள்ளிப் பூசிராத கிpளியே.....

     ஒங்கு வாப்பா எப்பிடிப்பட்ட மனிசன்...? ஒண்ட பத்து வயசில அவரு மவ்த்தாய்ட்டாரு... அவரும் நானும் வாள்ந்த வாள்க்க  எப்பிடியான வாள்க்க...? தெரியா ஒனக்கு... ஆனக்காவலுக்கு ராவையில தட்டத்தனிய போய் வார நெஞ்சுத் தகிரியமான ஆம்புள அவரு.... ஒவ்வொரு ராவையிலயும் போகக்க  தப்பாம அந்தப் பொன்னனெளுத்துப் பிங்கான எடுத்து  அதுலதான் சாப்பாட்டக் கட்டி  எடுத்துட்டுப் போவாரே...;ஊட்ட  சாப்பிர்ரதும் அதுலதான்.. எங்கயும் போய்ச் சாப்பிடுற எண்டாலும் அந்தப் பொன்னெளுத்துப் பிங்கானத்தான் எடுத்துப் போவாரு...  ~~ஞ்சங்க... ஊட்டுல இ.ந்த ஒரு பிங்கான் மட்டும்தானா இரிக்கி...?|| ண்டு நான் கேப்பன்.. நீயும் அதப் பாத்து ~~வாப்பா..வாப்பா.. இது வாப்பாப் பிங்கான்... ண்டு செல்லுவியே.... அதுக்கு வாப்பா என்ன செல்ற ண்டு தெரியிமாஹா புள்ளே..ய்...?
\

     ~~டியெ...சவரியத்து...ந்தப் பொன்னெழுத்துப் பிங்கானுல மட்டும்தாங்கா  நான் சாப்பிடுற... பலபல பிங்கானுகள்ள சாப்பிடுற பளக்கம் எனக்கிட்ட ல்லடி... நீயான் என்ட பொன்னெளுத்துப் பிங்கான்....|| ண்டு செல்லி என்னப் பாத்து கண்ணச் சிமிட்டிட்டுச் சிரிச்சாரே.... வெளங்கிச்சா புள்ள  ஒனக்கு... அது ஏணுண்டு... அதர கருத்து என்னண்டு....? பெரிய இங்கிலிசி சிங்கிலமெல்லாம் படிச்சிரிக்கிறியே..இதர அர்த்தம் தெரியிமா நொக்கு..?

     அப்பிடி... ஒருபிங்கான்ல மட்டும் சாப்பிட்டவண்ட மகள் நீ... ஒளுக்கமான ஓருமையான ஆம்புளைக்கிப் பொறந்தவள் நீ.. நீ ஒரு நாளும் பொளயா நடக்க மாட்டாய்.. அப்பிடி நா ஒன்ன வளக்கல்ல.. ஒண்ட வாப்பாவப் புலிப்பட சுட்டுக்கொண்டுபோடக்குள்ள ஒனக்குப் பத்து வயசி....எனக்கி 26 வயசி.. அந்த மனிசன சுட்டும் வெட்டியும் அரிஞ்சி எரத்தம் ஒறஞ்சி போய்.... மய்யித்து வரக்க........ என்ட தங்க மகளாரே... நான் எப்பிடித் துடிச்சித் தொவண்டு  போயிருப்பன்.... அவரு ஆருக்கு என்ன கருமம் செஞ்ச....?

     சும்மா வளக்கம் போல  ஆனக்காவலுக்குப் போக அதே பொன்னெளுத்துப் பிங்கானுல  சோறு கட்டிக் குடுத்தன்..  ~~வெட்டயால தமுளன்ட கொளப்பமா இரிக்காம்... ண்டைக்கும் காவலுக்குப் போகணுமா...?|| ண்டு கேட்டன்... சிரிக்காரு... புலிப்படயக் காட்டி சிங்கப்பட பொறுப்பு..  சிங்கப்படயக் காட்டியிம் ஆனப்பட பொறுப்புடி புள்ளேய்... வயலத் தொவைச்சிரும்... நான் போகாட்டி ஆனக் கூட்டம்  வட்டைக்க பூந்து அளிச்சிரும்.. என்ன நம்பி ஒரு கண்டம் பயிரு இரிக்கி...|| ண்டு செல்லிட்டு.. ஒன்னத் தூக்கிக் கொஞ்சினாரு.. ~~போறன் சவரியத்து! புள்ளயப் பாத்துக்க...|| ண்டுதான் அவரு கடசியாச் சென்ன கத.. போய்ட்டாரு...  அதான் கடசிப் போக்கு ண்டு எனக்கி எப்பிடித் தெரியிம்...?  பொலுபொலுண்டு விடியக்க-- வெசளம்வந்துட்டு...  அவரச் சுட்டும் வெட்டியும் வட்டைக்க கால்வாய்க்க போட்டிருக்காம்... பொன்னெளுத்துப் பிங்கான்ல சாப்பிட்ட பாதி சாப்பிடாமப் பாதி கெடக்குதாம்... துடிச்சிட்டன்டா தங்கோம்... என்னப் படச்ச நாயனே... என்னடாது ந்தக் கொடும.... ண்டு கத்தினன்..கதறினன்... ஆரு செஞ்ச...? ந்தக் கறுமத்த செஞ்சவன் ஆரு...? என்ட வாள்க்கயக் கொலச்சது ஆரு... அவன....? அவன.....?   நெஞ்சி அடைச்சி யாது மாறி உளுந்துட்டண்டி கிளியாரே...

     இருபத்தாறு வயசில பத்து வயசிப் புள்ளயோட திடீர்ண்டு வெதவ.... ராவு புரிசனனோடப் படுத்த நான்  அடுத்த நாள் கம்பொண்சாதியாப் போனன்...டி மகளே... ஒண்ட மொகத்தப் பாத்து.. ~எண்டல்லா...எண்டல்லா| ண்டு  கத்தினன்.. ஊரு கூடி ஆறுதல் பண்ணியும் ஆறுமாடி என்ட புண்ணு...? இனி என்னய்ற நான்... இதான் நம்முட தலநசிவு... அதத்தான் நம்முட தலயில ஆண்டவன் எழுதி வெச்சிட்டான்  ண்டு பொறுதி பொறுத்தன்...ஆருக்காக... ஒனக்காக... நீ மட்டும் ல்லாட்டி என்ட புரிசனோட என்ட உசிரயும் மாச்சிரிப்பன்.... ஒன்ட மொகத்துக்காகத்தான் பொறுதியானன்... அவர்ர மய்யத்தோட கொண்டாந்திருந்த அந்தப்  பொன்னெளுத்துப் பிங்கான  வடிவாக் களுவி  அடிப் பெட்டிக்க வெச்சிப் ப10ட்டிட்டன்... ஒனக்காக மட்டும் வாளத் துணிஞ்சிற்றன்.

     என்ன வேல செய்யல்ல நான்.. பொட்டி எளச்சன்.. புல்லுப் புடுங்கினன்.. அப்பம் சுட்டு வித்தன்... கடயளுக்கு  வட சுட்டுக் குடுத்தன்... ஊட்டு வேலையள் செஞ்சன்...பயிருபச்ச வெதச்சன்.. நெல்லுக் குத்தினன்..  சீட்டுக் கட்டினன்.. எல்லாம் செலவளிச்சி ஒன்னப் படிப்பிச்சன்... வாப்பா ல்லாத ஒரு சின்னக் கொறயும் வெயக்கல்ல... நீ கேட்டதெல்லாம் வாங்கித் தந்தன்... நீயும் நெல்ல கெட்டிக்காரிதான்.. என்ட கய்ட்டத்த ஒணந்து படிச்சாய்... எடுத்த சோதனயெல்லாம் பாசாய்னாய்....ஒசந்த படிப்புக்கு ண்டு செல்லி அரசாங்கமே ஒண்ண லண்டனுக்கு அனுப்பிச்சி..  செலவுக்கு ண்டு  ஒனக்கு ஊடு கட்ட வெச்சிருந்த காசெல்லாம் தந்தன்.. நீயும் லண்டனுக்குப் போய் ப்ப வரிசம் ரெண்டாய்ற்று.... கடிதம் அனுப்புறாய்..காசனுப்புறாய்...ப்ப எனக்கு ஒரு கய்ட்டமும் ல்லத்தான்... ஆனா....


     நான் என்ட புரிசன எளந்து இரிபத்தஞ்சி வருசத்துலயும்  நான் பட்ட கய்ட்டங்கள்....பட்ட சதுரப்பாடுகள்...ஆம்புளத் தொண  ல்லாம தட்டத் தனிய  ஒழுகிற  குடிசைக்க படுத்த அந்தக் காலத்துல.... எனக்கி வந்த சோதனயும் வேதனையிம் ஆருக்கு வெரும்...?  அந்நரம் எனக்கும் எத்தின வாள்க்கைகள் தேடி வந்திச்சுகள்.  மொதலாம் தாரம் ண்டும் ரெண்டாம்தாரம் ண்டும்... எத்தினயோ பேரு... ஆனா....என்ட மனசில எதுக்கும் எடம் குடுக்க நான் உடல்ல.. எண்ட நபுச ஒரேயடியா அடக்கிற்றன்... எண்ட ஓருமையான ஆம்புள்ள சாப்பிட்ட ந்தப் பொன்னெளுத்துப் பிங்கான்ல வேற எவருக்கும் சாப்பிட இடமில்ல.. அது நடக்காது.. கடசி மட்டும் நடக்காது... அப்பிடி ஓருமையோட இரிக்கிறவள்தான் ந்தச் சவரியத்து....ம்மா.... ஏ..ன்...?

     ஒரு பிங்கானுல மட்டும் சாப்பிட்டஅந்த மன ஓருமையான ஆம்பிளக்கி கடசி மட்டும் விசிவாசமா... அதப் பொன்னப் Nபுhல பாதுகாத்து... ஆரையும் அதுல சாப்பிட உடாம இருபத்தி அஞ்சி வரிசமா பாதுகாத்திரிக்கன்.......ஏன்.... என்ட விசிவாசம்... நம்பிக்க...ஒளுக்கம்.....

     அப்பிடிப்பட்ட எனக்கிப் பொறந்த  ஒனக்கிட்டயும் அந்தப் பொன்னெளுத்தப் பிங்கான்தான் இரிக்கிம்... அதுல நீ ஆரையும் சாப்பிட உடமாட்டாய் ண்டும் எனக்கித் தெரியிம்... ண்டாலும் புள்ளே.... எண்ட மனம் கெடந்து அல்லாடுது... ஒடன ந்த கெசட்டுப் பீசக் கேட்ட ஒடனே.... நாட்டுக்குப் பறந்து வாடா என்ட கண்டு மகளாரே.... நீ வெராட்டி என்ட மய்யத்துலதான் முளிப்பாய்... செல்லிட்டன்... வல்ல பெரிய நாயன் ஒனக்கு ஒதவி செய்யட்டும்....ஆமின்...

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.