புதியவை

நூல் வெளியீடு.-"ஜன்னல் ஓரத்து நிலா"-நூல்ஆசிரியர் கவிஞர் ரூபன்மலேசியத் தலை நகர் கோலாலம் பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள்
மண்டபத்தில் ஆதி குமணன் அரங்கில் கவிஞர்  ரூபன் அவர்களது   "ஜன்னல் ஓரத்து நிலா" என்னும் கவிதைப் புத்தகம்   மிகச் சிறப்பாக வெளியீடு செய்ப்பட்டுள்ளது.இன் நிகழ்வை மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியும் இனியநந்தவனப்பதிப்பகமும்
இணைந்து நடத்தியது.இன் நிகழ்வில் பெரு வாரியான  இலக்கிய வாதிகள் பங்கு பற்றி,.சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

மங்கள  விளக்கேற்றல் நிகழ்வுடன் பரத நாட்டிய நிகழ்வும் இடம் பெற்று நிகழ்வுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் நிகழ்வு இனிதே ஆரம்பிக்கப்பட்டது.

ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை நூலை  கனடா உதயன் இதழியல்

ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம் அண்ணா வெளியிட முதல்

நூலைமுனைவர் திரு. முரசு ராஜன் ஒரு தொகை பணம் செலுத்தி

பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில்  கலைவேந்தர் என்ற பட்டம் பெற்று நூலாசிரியர் சிறப்பிக்கப்பட்டார்

அத்தோடு மலேசிய எழுத்தாளர் சங்க வெளியகத் தொடர்பாளர் திரு

இராஜேந்திரன் ஐயா அவர்களால் பரிவட்டம் கட்டி மரியாதை செய்து

நினைவுப்பரிசும் வழங்கப்பட் டது


 அத்தோடு மலேசிய எழுத்தாளர் சங்க துணைத்தலைவர் பெருமால் மோகன் அவர்களால் போர்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது

அத்தோடு மலேசியா எழுத்தாளர் சங்கத் தலைவர்

 இன் நிகழ்வுக்கு.

01.தலைமைவகித்த வர் –

ஜேக்கப் சாமு வேல் (சிப்பாங் ம.இ.கா தொகுதித்தலைவர்)-மலேசியா

02-.நிகழ்வுக்கு முன்நிலை வகித்தவர்-

இனியநந்தவனம் சந்திர சேகர் (புதிப்பக ஆசிரியர்)-இந்தியா

03.வாழ்த்துரை வழங்கியவர்கள்

திரு ஆர் என். லோகேந்திரலிங்கம்(கனடா உதயன் இதழியல் ஆசிரியர்.)

திரு K.P.சாமி (தேசிய ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர்-மலேசியா).

திரு. இராஜேந்திரன்.(மலேசிய எழுத்தாளர் சங்க வெளியகத் தொடர்பாளர்)

திரு.Dr.S.M.ஹைதர் அலி(தொழில் அதிபர்-குவைத்.)

திரு.முனைவர் வி. முத்து. புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவர்.

இன் நிகழ்வை ஒருங்கினைப்பு செய்த திரு .ஆறுமுகம் செல்லத்துரை ஐயா

அவர்களுக்கு. டெங்கில் கிளை இந்தியர் காங்கிரஸ் கட்சி தலைவர்

முனியாண்டி கந்தசாமி ஐயாவுக்கும்  தனது நன்றியை தெரிவித்துக்

கொண்டார்  நூல் ஆசிரியர்

அத்தோடு சாதனையாளர்ருக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம் பெற்று

அத்தோடு இரவுநேர உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது நிகழ்ச்சி

தொகுப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் நூல் ஆசிரியரே கடமை ஆற்றி னார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.