புதியவை

பிரதகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் கிரித்தலே இராணுவ முகாமில் மேலதிக விசாரணை

பிரதகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் கிரித்தலே இராணுவ முகாமில் மேலதிக விசாரணை



ஊடகவியலாளர் பிரதகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிரித்தலே இராணுவ முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 28 ஆம் திகதி நீதிமன்றத்திடம் பெறப்பட்ட உத்தரவிற்கு அமைய இம்மாதம் 3 ஆம் திகதிக்கும் 13 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சந்தேகநபர்கள் கிரித்தலே இராணுவ முகாமிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுவரை 11 சந்தேகநபர்களை கைது செய்து தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் விசாரணை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.