புதியவை

சுயாதீன ஆணைக் குழுக்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு

சுயாதீன ஆணைக் குழுக்களுக்கு  தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை  முன்னெடுப்பு

சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக விண்ணப்பித்துள்ள 441 வேட்புமனுக்களில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை அரசியலமைப்புப் பேரவையின் சிவில் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
4 சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக அரசியலமைப்புப் பேரவையினால் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
சபாநாயகரினூடாக குறித்த பெயர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள், நேற்று (09) கூடிய அரசியலமைப்புப் பேரைவையினால் பரிந்துரை செய்யப்பட்டனர்.
சில வேட்பு மனுக்களை ஆணைக்குழுக்களின் விடயங்களை மையப்படுத்தி பிரேரித்துள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புப் பேரவையின் சிவில் பிரதிநிதிகளான ரதிகா குமாரசுவாமி, கலாநிதி ஏ.டீ ஆரியரத்ன மற்றும் ஷிப்லி அஸீஸ் ஆகியோரால் முன்வைக்கப்படும் பிரேரிப்புக்களுக்கு அரசியலமைப்புப் பேரவையினூடாக அனுமதி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.