புதியவை

கலிகாலம் (கவிதை) -பி. எம் கமால் .கடையநல்லூர்

புறாவின் கறி

நியாயத்தராசில் !

சிரிக்கிறான்

சிபிச் சக்கரவர்த்தி !


பசு அடித்த

மணியின் ஓசை

இன்னும் இன்னும்

நம்காதுகளில் !

மனு நீதிச் சோழனின்

மனசாட்சியோ

செவிடாகிப் போனது !

நீதி தேவதை

துகிலுரியப்பட்டுவிட்ட பின்னும்

பரந்தாமன் இன்னும்

பறந்து வரவில்லை !

நீதி அரசர்களுக்கு

இன்னும்

போதி மரம் எங்கே

என்ற போதம் இல்லை !

அதனால்

மாமிச உணவு

சைவம் ஆகிறது !

அவரைக்காயும்

சுரைக்காயும்

அவசரமாக

அசைவம் ஆகிறது !


பூமியில்

பொடிக் கற்களை  விதைத்துப்

பணக்கற்றை நீரூற்றினால்

நினைத்த பயிர்

நீதியாய் முளைக்கும்

உலகம் இது !

நல்லவர்களை  அழிப்பதற்கும்

தீயவர்களைக்

காப்பதற்கும்

புதிய கண்ணன்

விதி எழுதும் நேரமிது


பண மகளை

மணப்பதற்காக

இராமர்கள்

நீதி வில்லை

ஒடிக்கும் கலிகாலமிது !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.