புதியவை

விபத்துக்களை குறைப்பதற்காக பஸ் சாரதிகளுக்கு விசேட பயிற்சி

விபத்துக்களை குறைப்பதற்காக பஸ் சாரதிகளுக்கு விசேட பயிற்சி



அடுத்த வருடம் ஜனவாரி முதலாம் திகதி முதல் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்தின் போது அனுமதிக்கப்பட்ட சாரதிகளுக்கு மாத்திரமே போக்குவரத்து அனுமதி வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது காணப்படும் விபத்துக்களை குறைப்பதற்காக பஸ் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரிசிரி தெரிவித்துள்ளார்
குறித்த பயிற்சியினை பயணிகள் போக்குவரத்தின் விசேட தகைமையாக கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் அனுமதியின்றி பயணிகள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜகத் சந்திரசிரி குறிப்பிட்டார்.
அத்துடன் அனுமதியின்றி போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.