புதியவை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ் காட்டில் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி


சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் ஜனன தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள அவரது ராஜ் காட் நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷிட் ஆகியோரும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களும் பெருந்திரளாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
காந்தி ஜெயந்தி என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான இன்றைய தினம் சர்வதேச அகிம்சை தினமாகவும் நினைவுகூரப்படுகிறது.
காந்தியின் 146 ஆவது ஜனன தினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சத்தியாக்கிரகம் ஊடாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் ஏனைய சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தவர் காந்தி என்றால் அது மிகையாகாது.
1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அறவழிப் போராட்டத்தின் மூலம் இந்திய தேசத்திற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்துவிட்டு 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி இம்மண்ணுலகை விட்டகன்றார்.
நாதுராம் கோட்சே என்பவரால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இத்தினத்தை இந்தியா தியாகிகள் தினமாக நினைவுகூர்ந்து வருகிறது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.