புதியவை

உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்: ஆய்வில் தகவல்

உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்: ஆய்வில் தகவல்உயரமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு கணிசமான அளவு அதிகம் என சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிகமாக 10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஆண்களுக்கு 11 சதவீதமும் பெண்களுக்கு 18 சதவீதமும் புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இலட்சக்கணக்கானவர்களிடமிருந்து திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம் காணப்படுவதற்கான காரணம் என்னவென தெளிவாகக் கண்டறியப்படவில்லை.
இதே ஆய்வொன்றினை முன்னர் பிரிட்டன் நடத்தியிருந்ததாகவும் பிரிட்டனின் ஆய்வுடன் ஸ்வீடன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஒத்திருப்பதாகவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.