
தெற்கு பசுபிக் கடலில், ப்ரான்ஸ் நாட்டு அளவிலான மிகப் பெரிய பரப்பை பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாக அறிவிக்கப்போவதாக நியூசிலாந்து தெரிவித்திருக்கிறது.
கெர்மடெக் பெருங்கடல் சரணாலயம் என்ற இந்தப் பகுதி, பிரதான நிலப்பரப்புக்கு வடக்கே அமைந்திருக்கிறது. சில சிறுசிறு தீவுக் கூட்டங்களையும் கடலடி எரிமலைகளையும் உள்ளடக்கியதாக இந்தப் பகுதி இருக்கும்.
நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நியூசிலாந்துப் பிரதமர் ஜான் கீ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தப் பகுதியில் மீன் பிடித்தல் போன்றவை தடைசெய்யப்படும்.
இந்த கடல் காப்புப் பிரதேசத்தை உருவாக்குவதற்கான சட்டம் அடுத்த ஆண்டு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் 6,20,000 சதுர கிலோ மீட்டர் பகுதி பாதுகாக்கப்படும்.
இந்தப் பகுதியில்தான் உலகின் மிக ஆழமான பகுதிகளில் ஒன்றான 10 கி.மீ. ஆழமுடைய ‘கார்மெடெக் பாதாளம்’ இருக்கிறது.
திமிங்கிலம், டொல்பின், அழிவின் விளிம்பில் இருக்கும் ஆமைகள், கடல் பறவைகள் என வளமான பல்லுயிர் பிரதேசமாக இது கருதப்படுகிறது.
நியூசிலாந்து அரசின் இந்த முயற்சியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனால், நியூசிலாந்தின் இந்த அறிவிப்பு மீன் பிடி மற்றும் சுரங்க நிறுவனங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.