
இரத்தனபுரி, களுத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வௌ்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மழையுடனான வானிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடருமானால் வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயமுள்ள இடர் முகாமைத்துவ நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது
இன்றைய வானிலை தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் ஸாலிஹீன்
இம்முறை ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவிக்கின்றது
மன்னார் கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நெற்கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக சபையின் தலைவர் எம் பி திசாநாயக்க தெரிவத்துள்ளார்
எவ்வாறாயினும் ஏனைய அதிகமான பிரதேசங்களில் நெற்கொள்வனவு நடவடிக்கை உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.